அவர் எனக்கு 2வது கணவன் தான்..! ஆனால் அவரையும் அந்த டிக் டாக் அழகி பறித்துக் கொண்டாள்..! தவியாய் தவிக்கும் இளம் மனைவி!

டிக்டாகிற்கு அடிமையான கணவன் மனைவியை நடுத்தெருவில் தவிக்கவிட்டு சென்ற சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு முரளிதரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். முரளிதரனின் முதல் மனைவி இறந்து போக, ஒரு விதவை பெண்ணை அவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு டிக்டாக் மீது அதிக ஈடுபாடுள்ளது. ஒரு கட்டத்தில் இவர் டிக்டாக்கிற்கு அடிமையானார். அப்போது திருச்சியை சேர்ந்த பெண் ஒருவரின் வீடியோக்களை பார்த்த முரளிதரன் அவருக்கு காதல் வலை வீசியுள்ளார். அந்த வலையில் அந்த டிக்டாக் பெண்ணும் விழுந்தார். 

அதன் பின்னர் இருவரும் தங்கள் கள்ளக்காதலை நேரில் சந்தித்து வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்றனர். இருவரும் தனிமையில் சந்தித்து கொள்ளும் அளவிற்கு நெருக்கம் காட்டினர். பின்னர் இரு சக்கர வாகனத்தில் ஒன்றாக செல்வதும், பேருந்தில் வெளியூர்களுக்கு பயணம் செய்வதும் என்று தங்களுடைய கள்ளக்காதல் வாழ்க்கையில் மூழ்கிவிட்டனர்.

இதனை அறிந்து கொண்டு சண்டை போட்டு முரளிதரனின் இரண்டாவது மனைவியிடம், தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் செய்த அத்தனை திறமைகளையும் முதலில் மறைத்துள்ளார். பின்னர் தன்னுடைய டிக்டாக் காதலிக்கு நாமக்கல்லில் வீடு எடுத்துக் கொடுத்து குடித்தனம் நடத்தினார். அதில் வெளியான வீடியோக்கள் தான் முரளிதரனின் இரண்டாவது மனைவிக்கு ஆதாரமாக கிடைத்தது.

அவர் முரளிதரனை கடுமையாக எச்சரித்தவுடன், முரளிதரன் அவரை நடுத்தெருவில் தவிக்கவிட்டு கள்ளக்காதலியுடன் தலைமறைவாகியுள்ளார். இதனால் கடும் ஆத்திரத்திற்காளான அந்த விதவை பெண், காவல் நிலையத்தில் தன்னுடைய கணவனை மீட்டெடுத்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று புகாரளித்துள்ளார்.

இந்த சம்பவமானது தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.