16 வயதில் காதல் திருமணம் செய்த ரம்லத்..! 30 வயதில் தகாத உறவு? கண்டுபிடித்த கணவனால் அரங்கேறிய பயங்கரம்!

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொலை செய்துள்ள சம்பவமானது திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட குறிச்சிகுளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சொரிமுத்து. சொரிமுத்துவின் வயது 37. இவர் 14 ஆண்டுகளுக்கு முன்னர் கேரள மாநிலத்தை சேர்ந்த ரம்லத் என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரம்லத்தின் வயது 30. 

இதனிடையே கடந்த சில மாதங்களாக ரம்லத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு இளைஞருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சில வாரங்கள் கழித்து சொரிமுத்து தன்னுடைய மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சொரிமுத்து ரம்லத் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே இன்று அதிகாலை தன் மனைவியை தாழையூத்துக்கு செல்ல வேண்டும் என்று வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் மறைவான புதர் வந்தவுடன் வண்டியை நிறுத்தியுள்ளார்.

உடனடியாக ரம்லத்தை புதருக்குள் அழைத்து சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார். சம்பவயிடத்திலேயே ரம்லத் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட சொரிமுத்து தாழையூத்து காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சொரிமுத்துவை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது தாழையூத்து பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.