தோழினு நினைச்சேன்..சக்களத்தி ஆயிட்டா..! ஏங்கிய மனைவிக்கு கணவன் கொடுத்த விபரீத பரிசு..! சென்னை திகுதிகு!

வேறொரு பெண்ணுடன் கள்ளக்காதலை தொடர்வதற்காக மனைவியை கொலை செய்த சம்பவமானது சென்னை புறநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புறநகரான மதுரவாயலில் கன்னியப்பமுதலி தெரு எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஜெயவேல் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 38. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் திலகம். திலகத்தின் வயது 37. நொளம்பூரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் திலகம் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதியினருக்கு சஞ்சய் என்ற 12 வயது மகனும், ஜனனி என்ற 11 வயது மகளும் உள்ளனர். 

2 குழந்தைகளும் அருகிலுள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். திடீரென்று சென்ற சனிக்கிழமை இரவன்று குடும்பத்தகராறு காரணமாக, திலகா கொலை செய்துகொண்டதாக ஜெயவேல் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.

காவல்துறையினர் திலகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய கழுத்து மற்றும் பிற உறுப்புகளில் ரத்த காயங்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். பிரேதபரிசோதனை முடிவில் திலகம் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வெளியாகியுள்ளது.

உடனடியாக காவல்துறையினர் ஜெயவேலிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டார், அதாவது முன்பு குடியிருந்த வீட்டிற்கு திலகத்தின் தோழி அடிக்கடி வந்ததாகவும், அப்போது இருவருக்குள்ளும் நெருக்கம் ஏற்பட்டு, அந்த நெருக்கம் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறியுள்ளார். 

ஜெயவேல் இயக்கி வந்த லோடு ஆட்டோவில் அந்தப்பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டிருந்ததால் திலகவதி ஜெயவேலுடன் கடமையான தகராறில் ஈடுபட்டுள்ளார். சென்ற சனிக்கிழமை அன்று இருவருக்குள்ளும் மீண்டும் தகராறுகள் அதிகரித்துள்ளன. அப்போது திலகம் "என்னை கொன்றுவிட்டு, அவளோட குடும்பம் நடத்து" என்று காட்டமாக கூறியுள்ளார்.

வெளியே சென்று மது அருந்தி விட்டு வீட்டிற்கு திரும்பிய ஜெயவேல் மீண்டும் திலகத்துடன் சண்டை போட்டுள்ளார். மற்றொருமுறை திலகம் "என்னை கொன்றுவிட்டு, அவளோட குடும்பம் நடத்து" என்று கூறியவுடன் மது போதையில் இருந்த ஜெயவேல் தலையணையால் மூச்சு திணறடித்து திலகத்தை கொலை செய்துள்ளார்.

திலகம் இறந்த பின்னரும் அவருடைய புடவையால் கழுத்தை நெரித்து தற்கொலை போன்று நாடகமாடியுள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது மதுரவாயல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.