தெருநாய்களை வேட்டையாடி உணவகங்களில் விற்பனை செய்த பகீர் மனிதன்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

இளைஞன் ஒருவன் தெருநாய்களை கொன்று உணவகங்களுக்கு விற்ற சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனா நாட்டில் ஜாங்ஜியாங் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு சென் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் அப்பகுதியை சுற்றி வந்துள்ளார். அப்போது தெருவில் ஓரமாக இருந்த நாய்கள் மீது விஷ ஊசிகளை ஏவி வந்ததை பொதுமக்கள் கண்டுள்ளனர்.

உடனடியாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். சென்னை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதாவது அன்று காலை முதல் நாய்களுக்கு விஷ ஊசி போட்டு இறந்த பின்னர் நாய்களை பைக்குள் வைத்து சென்றுள்ளார். 

இதற்கான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குளிர்காலத்தில் சீன மக்கள் நாய்க்கறியை விரும்பி சாப்பிடுவது வழக்கம். ஆகையால் இந்த நபர் நாய்களை கொன்று குவித்ததாக கூறப்படுகிறது.  

நாய் இறைச்சிக்காக மக்கள் கூட்டம் கடைகளில் அலைமோதுவதை அவர் கண்டுள்ளார். அப்போது அவருக்கு இறைச்சி வாங்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. அதற்கு பணம் அதிகமாக தேவைப்பட்டதால், அவர் தெருநாய்களை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் விஷவில்களை வாங்கியுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் சீனா நாட்டில் வருடத்திற்கு 10 மில்லியன் நாய்கள் கொலை செய்யப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான நாய்கள் செல்லப்பிராணிகள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவமானது சீன நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.