ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கொழுந்தனால் ஏற்பட்ட பயங்கரம்! திருவண்ணாமலை திக்திக்!

கள்ளக்காதலை தடுத்து நிறுத்திய அண்ணியை இளைஞர் ஒருவர் கொலை செய்திருப்பது திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜம்னாமரத்தூர் அருகே கீழ்விளாமூச்சி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 45. இவரின் மனைவியின் பெயர் மின்னல்கொடி. மின்னல்கொடியின் வயது 40. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அண்ணாமலை சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். 

அண்ணாமலையின் சகோதரரின் பெயர் சௌந்தர்ராஜன். சௌந்தர்ராஜனின் வயது 30. இவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனிடையே கணவர் சொந்த ஊரிலில்லாத நேரங்களில் கொழுந்தனுடன் மின்னல்கொடிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது நீண்ட காலம் தொடர்ந்த பின்னர் ஒருவழியாக சௌந்தர்ராஜனின் மனைவிக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து சௌந்தர்ராஜனின் மனைவி, மின்னல்கொடியை கடுமையாக கண்டித்துள்ளார்‌. மின்னல்கொடி உடனடியாக தன்னுடைய கள்ளக்காதலை முறித்து கொண்டுள்ளார். 6 மாதங்களாக சௌந்தர்ராஜனிடம் பேசுவதை மின்னல்கொடி தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் சௌந்தர்ராஜன் கடுமையான மனவேதனை அடைந்துள்ளார். பலமுறை அவரை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு சௌந்தர்ராஜன் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் மின்னல்கொடி சௌந்தர்ராஜனின் மிரட்டலுக்கு இணங்கவில்லை.

இதனால் தன்னுடைய உறவினருடன் இணைந்து மின்னல்கொடியை கொலை செய்துவிட வேண்டும் என்று சௌந்தர்ராஜன் திட்டமிட்டுள்ளார். 25-ஆம் தேதி இரவு நேரத்தில் உறவினருடன் இணைந்து கிராமத்தில் வந்து கொண்டிருந்த மின்னல்கொடியை மடக்கி வற்புறுத்தியுள்ளார். அப்போதும் ஒப்புக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த சௌந்தர்ராஜன், மின்னல்கொடியின் முதுகில் கல்லை கட்டி ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் சவுந்தரராஜனுக்கு தொடர்பிருப்பது தெரியவந்து அவரை கைது செய்துள்ளது. ஆனால் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் யார் என்பதை காவல்துறையினரால் தற்போது வரை கண்டுபிடிக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.