தீராத வயிற்று வலி..! முழு பாட்டிலை ஆசன வாய் வழியாக உடலுக்குள் நுழைத்த நபர்! எக்ஸ் ரேவில் பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

60 வயது நபரின் ஆசனவாயுவிற்குள் பாட்டில் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் குயாங்டாங் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இங்கு 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தன்னுடைய அடிவயிற்றில் அதீத வலியிருப்பதாக கூறி மருத்துவர்களிடம் சென்றுள்ளார். 

மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது அந்த நபரின் அடிவயிற்றில் ஒரு முழுநீள பாட்டில்  இருந்துள்ளது.  

இதுகுறித்து மருத்துவர்கள் அந்த நபரிடம் விசாரித்தனர், அப்போது அவர், "ஆசனவாயிலில் எனக்கும் ஏதோ முணுமுணுப்பு போன்ற உணர்வு ஏற்பட்டது. இதனால் என்னால் சரியாக இருக்க இயலவில்லை. ஃப்ளோரிடா பாட்டில் வாங்கி என்னுடைய ஆசனவாயிலில் சொருகிய போது எதிர்பாராவிதமாக உள்ளே சென்றுவிட்டது" என்று கூறியுள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, உள்ளே சிக்கிக்கொண்ட பாட்டிலை வெளியே எடுத்தனர். இந்த சம்பவமானது சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.