மச்சினியுடன் கள்ளக்காதலை தொடர்வதற்காக ஆண் ஒருவர் மனைவியை கொலை செய்த சம்பவமானது உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை கர்ப்பமாக்கிவிட்டு மச்சினிச்சியுடன் தகாத உறவு..! பிறகு கணவன் செய்த பகீர் சம்பவம்! என்ன தெரியுமா?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு கணவன்-மனைவி தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் அந்த கணவருக்கு மனைவியின் தங்கை மீது மோகம் ஏற்பட்டுள்ளது. எப்போதும் அந்த ஆண் தன்னுடைய மனைவிக்கு பயந்து கொண்டும், அந்த பெண் தன்னுடைய அக்காவுக்கு பயந்து கொண்டும் தங்களுடைய கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர்.
இது அவர்களுக்கு பிடிக்காமல் போனது. தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மனைவியை கொன்றுவிடலாம் என்று தன் மச்சினிச்சியிடம் கூறியுள்ளார். இதற்கு மச்சினிச்சியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில் மனைவியை விஷம் வைத்துக் கொள்வதற்கு கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி எடுபடவில்லை. இந்நிலையில் 3 பேரிடம் பணத்தை கொடுத்து, வீட்டில் திருடுவது போன்று நடிக்க கூறி தன்னுடைய மனைவி கொன்றுவிடுமாறு கணவர் கூறியுள்ளார்.
அதன்படி அவர்கள் வீட்டிற்குள் வந்து சில பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு, அந்த நபரின் மனைவியை கொன்று சென்றனர். வீடு புகுந்து திருடர்கள் கொள்ளையடித்துவிட்டு மனைவியை கொலை செய்து சென்றனர் என்று கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தபோது கணவர் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இறந்துபோன பெண்ணின் கணவரிடம் தீவிரமாக விசாரித்த போது, கொலை செய்ய திட்டமிட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். உடனடியாக காவல்துறையினர் அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டு கைது செய்தனர்.
இந்த சம்பவமானது காசியாபாத் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.