அதான் நீ கர்ப்பமாகிட்டீயே..! காதலியை கழட்டிவிட்டு வேறு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான இளைஞன்! பிறகு நடந்தது என்ன?

காதலியை கற்பழித்து கர்ப்பமாக்கிய இளைஞர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் கைது செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டையில் சமாதானபுரம் காந்திநகர் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு ஜெயக்குமார் என்ற 28 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து பாளை மார்க்கெட் பகுதியில் மர வியாபாரம் செய்து வந்தார்.

இதனுடைய இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்து உள்ளனர். நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என்று ஜெயக்குமார் கூறிய காரணத்தினால் அந்த இளம்பெண் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தது அவருடைய பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியத.

வேறு வழியே இல்லாத காரணத்தினால் ஜெயக்குமாரை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டனர். முறைப்படி பேசுவதற்காக ஜெயக்குமாரின் வீட்டிற்கு சென்றபோது, அவர்கள் எந்த திருமணத்திற்கு துளிகூட ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இளம்பெண் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே ஜெயக்குமாருக்கு தூத்துக்குடியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் நேற்று திருமணம் நடக்கவிருந்தது. இந்த செய்தியை கேட்டவுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண் பாலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நிகழ்ந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் திருமணம் நடக்கவிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.