ஹீரோக்களுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவில்லை! அதனால் தான்! கதறும் ஒஸ்தி நடிகை!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையான மல்லிகா ஷெராவத், அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஒப்புக் கொள்ளாததால் பல திரைப்பட வாய்ப்புகளை தான் இழந்து உள்ளதாக கூறியுள்ளார்.


நடிகை மல்லிகா ஷெராவத் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசுகையில் திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

பொதுவாக கவர்ச்சி ரோலில் பின்னி பெடலெடுக்கும் மல்லிகா ஷெராவத் தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிக் கூறினார்.

நான் பல பட வாய்ப்புகள் இழந்துள்ளேன் காரணம் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பெரிய பெரிய நடிகர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு ஒப்புதல் செய்யாததால்  தான் . இருப்பினும் எவரும் என்னை நேரடியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய  அழைத்ததில்லை .

ஆனால் ஒரு பெண்ணாக ஒருவர் நம்மிடம் எப்படிப் பழகுகிறார் என்பதை வைத்தே அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். இப்படியாக பல பேர் தங்களுடைய ஆசைக்கு என்னை இணங்க வைக்க முயற்சித்துள்ளனர்.

அவ்வாறாக நான் இணங்காததால் பல பேரிடம் வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன், என்று கூறினார் நடிகை மல்லிகா ஷெராவத். மீ டு போன்ற அமைப்புகள் இருப்பதால் தான் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் அமைந்திருப்பதாக மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார் .