படுக்கையில் இருந்த 44 வயது ஆண் கொரோனா நோயாளி..! ஆடைகளை விலக்கி டாக்டர் செய்த பகீர் செயல்..! மருத்துவமனை பயங்கரம்!

ஆண் கொரோனா நோயாளியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி மருத்துவர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் உள்ள 44 வயது ஆண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 30ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐசியு தனி அறையில் அனுமதிக்கப்பட்டு அந்த நோயாளி சிகிச்சை பெற்று வந்தார். அன்றைய தினம் புதிதாக பணியில் இணைந்த மருத்துவர் ஒருவர் அந்த நோயாளி இருந்த தனி அறைக்கு சென்று ஆடைகளை விலக்கி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் பதறிய அந்த நோயாளி அலாரம் ஒலி எழுப்ப முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அந்த மருத்துவர் நோயாளியின் முயற்சியை தடுத்துள்ளார்.

அந்த நோயாளியின் அறையிலிருந்து தவறாக நடந்து கொண்ட மருத்துவர் வெளியேறிய பின்பு அந்த நோயாளி அங்கிருந்த ஊழியர்களுக்கு அங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த மருத்துவரை பணி நீக்கம் செய்து போலீசில் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவர் மீது நோயை பரப்ப முற்பட்டது மற்றும் இயற்கைக்கு மாறாக நடந்து கொண்டது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் கொரோனா நோயாளி மீது நேரடியாக தொடர்பு கொள்ள முற்பட்டதால் அவரை இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வசிக்கும் பகுதி தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.