மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர்! வலுக்கும் போராட்டம்!

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பெயரை வைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தேவர் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் - கைது


மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவார் பெயரை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதர்கள் பிறந்த ஊரான நரிக்குடியில் முழு உருவ வெண்கலச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பதுடன், 7 ம் வகுப்பு பாடத் திட்டத்தில் அவருடைய முழு வரலாற்றை சேர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேவர் பேரவையினர் 100க்கும் மேற்பட்டோர், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடந்து சாலை மறியலில் ஈடுபட்ட 186 பேர் தல்லாகுளம் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். முன்னதாக முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலும் போராட்டம் நடைபெற்றது.

தற்போது மதுரையை மையமாக வைத்து போராட்டம் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.