இயற்கை உபாதையை கழிக்க சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! CCTVல் பதிவான அதிர்ச்சி சம்பவம்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிறுமியை பாலியியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.


மத்தியப் பிரதேச மாநிலம் நரசிங்பூரைச் சேர்ந்தவர் அந்தச் சிறுமி.  கடந்த 24-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் இயற்கை உபாதையை கழிசென்றபோது தனக்கு நேரப்போகும் கொடூரம் அந்தச் சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை.

அந்தச் சிறுமியை பின் தொடர்ந்த காமுகன் வலுக்காட்டாயமாக தூக்கிச் சென்று தனிமையான ஒரு இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மர்ம நபரைப் பிடிக்க போலீசார் சுற்றுவட்டார சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து  வருகின்றனர். 

உடல்ரீதியாகவும், மன அதிர்ச்சியாலும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமிக்கு உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு ஜபல்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது  அந்தச் சிறுமி அபாய கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.