கழிப்பறையில் வைத்து கணவனை புகைப்படம் எடுத்தால் மனைவிக்கு ரூ.51 ஆயிரம் பரிசு! மாநில அரசின் பலே திட்டம்! செம்ம காரணம்!

திறந்தவெளி கழிப்பிடங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மத்திய பிரதேச அரசாங்க மிகச் சிறப்பான முடிவை எடுத்துள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள இளம் பெண்களுக்கு திருமண உதவி தொகையாக 28 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் கழிவறைகள் இருந்தால் மட்டுமே இந்த உதவித்தொகை அளிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இந்த தொகை 51 ஆயிரமாக அதிகரித்தது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களிலும் திறந்தவெளி கழிவறைகளில் உபயோகப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரம் சீர்கேடு அடைந்து பல வகையான நோய்கள் பரவி வருகிறது.

இதனை தடுப்பதற்காக மத்திய பிரதேச அரசாங்கம் தற்போது ஒரு அருமையான முடிவு எடுத்துள்ளது. அதாவது திருமண உதவித்தொகை பெற விரும்பும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள இளம் பெண்கள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் அதிகாரிகளால் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று சோதனை நடத்த இயலவில்லை. 

ஆகையால் இளம்பெண்களின் கணவன்மார்கள் கழிவறையும் வாயிலில் நின்றுகொண்டு செல்பி எடுத்து அனுப்ப வேண்டும் என்று மத்தியப்பிரதேச அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.