ஸ்டாலின் - டி.ஆர். பாலு போட்டோ ஷாப் புரளி! அம்பலப்படுத்திய ஐநா! தெறித்து ஓடும் திமுகவினர்!

தற்பொழுது தமிழகத்தில் திமுகவினர் ஸ்டாலின் குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை வைரலாக பரப்பி வருகின்றனர்.


அதில், ஐநா சபையின் முன்னாள் துணை பொதுச்செயலாளர் ஜான் எலியாசன்  எழுதிய நான் வியந்த உலகத்தலைவர்கள் என்ற புத்தகத்தில் முக ஸ்டாலின் அவர்களைப் பற்றி புகழ்ந்து எழுதி இருப்பதாக பொய்யான தகவலை பரப்பி வந்துள்ளனர்.

மேலும் அப்புத்தகத்தின் 372வது பக்கத்தில் முக ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவர் என்றும், என்னுடன் அவர் சந்தித்த பேசியதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் பிரச்சினையை மட்டுமே பேசி இருந்தார் என்றும் அவரைப் போன்ற ஒரு தலைவர் பிற நாடுகளில் கிடைத்திருந்தால் அவரை நாடே தூக்கி வைத்து கொண்டாடும் என்றெல்லாம்  ஜான் எலியாசன் எழுதி இருந்ததாக கூறி வந்தனர்.

மேலும் அவரோடு ஐநா சபையில் ஸ்டாலின் சந்தித்தவாறு புகைப்படம் ஒன்றையும் சமூக தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வந்தனர். இந்நிலையில் இதனை ட்விட்டரில்  கண்ட  ஐநா சபை உறுப்பினர்கள் சிலர்,  ஜான் எலியாசனை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த  ஜான் எலியாசன்அது ஒரு பொய்யான வதந்தி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும் வைரல் ஆகி வந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி இப்படி ஒரு சந்திப்பு நிகழவே இல்லை என்றும் அப்புகைப்படம் முற்றிலும் போலியானது எனவும் தெரிவித்தார்.