கோவை பரபரப்பு! மாலையும் கழுத்துமாக போலீஸ் ஸ்டேசன் வந்த இளம் ஜோடி! காரணம் என்ன தெரியுமா?

காதலித்து திருமணம் செய்த ஜோடி உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவமானது துடியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் துடியலூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே ராக்கியபாளையம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகனின் பெயர் பிரஷாந்த். பிரசாந்தின் வயது 27. இவர் தனியார் பஸ் நிறுவனம் ஒன்றில் நடத்துராக பணியாற்றி வருகிறார்.

சிவகிரியில் மயில்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகளின் பெயர் கார்த்திகா. கார்த்திகாவின் வயது 24. இவ்விருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இருவீட்டாருக்கும் இவர்களுடைய காதல் தெரியவந்தது. இருவரது பெற்றோரும் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி சில நாட்களுக்கு முன்னர் இருவரும் கோவையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் இருவரும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசி வைத்து மணமக்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது துடியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.