2 நாளில் திருமணம்! ஆனால் காதலனுடன் சேர்ந்து இளம் பெண் செய்த பகீர் செயல்! அதிர்ந்த உறவுகள்!

கர்நாடகாவில் காதலை வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் சோகத்தில் மூழ்கியிருந்த காதல் ஜோடி காதலர் தினத்தன்று ஒன்றாக இணைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கர்நாடகாவில் உள்ள மைசூர் பகுதியில் வசித்து வருபவர் சச்சின் (வயது 23) இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (வயது 21) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக கல்லூரியில் படித்த போதிலிருந்து காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது . இந்நிலையில் இவர்கள் வீட்டுப் பெரியவர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிந்துவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கான தேதியையும் குறித்துள்ளனர்.

பிப்ரவரி 16ஆம் தேதி சிந்துவிற்கு திருமணம் நடத்துவதற்காக பெரியோர்கள் திட்டமிட்டு இருந்திருக்கின்றனர். இதனால் மனமுடைந்த சிந்து தன் காதலரிடம் இதனைப் பற்றிக் கூறியிருக்கிறார் ஆகையால் இருவரும் இணைந்து விபரீதமான முடிவை எடுத்துள்ளனர்.

இருவரும் இணைந்து ஹாரங்கி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக முடிவு எடுத்துள்ளனர். தற்கொலை செய்து கொள்வதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக சச்சின் அவர் வீட்டிற்கு போன் செய்து காதலை ஏற்றுக் கொள்ளாததால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியிருக்கிறார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவரை தற்கொலை செய்துகொள்ளாமல் இருக்குமாறு கூறியுள்ளனர் உடனே அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஓடி வந்துள்ளனர் ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே இருவரும் அந்த அணையில் நீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.