புற்று நோய் என தெரிந்தும் காதலனை கரம் பிடித்த இளம் பெண்..! ஆனால் கணவன் இறப்பிற்கு பிறகு எடுத்த முடிவு! நெகிழ்ச்சி சம்பவம்!

காதலர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்தும் திருமணம் செய்துகொண்ட பெண்ணை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


மும்பை மாநகரில் ஷீதல் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டு மாநாட்டில் பங்கேற்ற போது ஒரு இளைஞருடன் அதிகமாக நெருக்கம் அடைந்துள்ளார். நீண்ட உரையாடலுக்கு பின்னர் இருவரும் ஒரே கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அதன் பிறகு இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருவரும் பல மணி நேரம் ஒன்றாக மகிழுந்து பேசியுள்ளனர். இருவரின் நெருக்கமும் அடுத்த கட்டத்திற்கு செல்ல தொடங்கியது. அப்போது திடீரென்று அந்த இளைஞனின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது. மிகவும் சோர்வாக அந்த இளைஞர் தினமும் காணப்பட்டுள்ளார். 

தன்னுடைய சோர்வு குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்த போது, புற்றுநோயானது 3-வது கட்டத்தை அடைந்திருப்பதாக மருத்துவர் கூறியது அந்த இளைஞனுக்கு பேரிடியாக அமைந்தது‌. உடனே இதுகுறித்து அந்த இளைஞன் ஷீதலிடம் கூறியுள்ளார்.

அப்போது அவர் வாழ்நாள் முழுவதும் உனக்கு துணையாக இருப்பேன் என்றும், உயிருக்கு உயிராக காதலித்து வருவதாகவும் கூறியுள்ளார். பின்னர் அந்த இளைஞர் மீண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஷீதல் முழுமனதுடன் பங்கேற்றுள்ளார். இருப்பினும் அந்த இளைஞரின் உடல் முழுவதிலும் புற்றுநோய் பரவியது. அதிகபட்சமாக வெறும் 6 மாதங்கள் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கூறியதை அறிந்தும், ஷீதல் கோவிலில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு மருத்துவர்கள் கூறியவாறு அந்த இளைஞர் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி உயிரிழந்தார். அவருடைய மரணமானது ஷீதலுக்கு பேரிடியாக அமைந்தது. ஒருமாத காலம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று காட்சி அளித்த ஷீதல், ஆசிரமத்தில் சேர்ந்து கொண்டார். அங்கே கிடைத்த அனுபவத்தின் மூலம் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை தனக்குள் அதிகரித்து கொண்டுள்ளார்.

தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற வரையான உதவிகளை அவர் செய்து வருகிறார். ஷீதலின் இந்த செயல்களானவை அவருக்கு பெரும் புகழ் சம்பாதித்துள்ளது.