ரொம்ப நம்பினேன்..! ஆனால் அவன் அந்த போட்டோவை வெளியிட்டான்! பார்த்த உடன் காதலி எடுத்த விபரீத முடிவு! சீர்காழி அதிர்ச்சி!

பழிவாங்குவதற்காக காதலன் தன்னுடைய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் மானமிழந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட திருமுல்லைவாசல் எனுமிடம் அமைந்துள்ளது. இங்கு கலியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகளின் பெயர் சுபஸ்ரீ. இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். பல்வேறு காரணங்களுக்காக இவர் தன்னுடைய படிப்பை இடைநிறுத்தம் செய்துவிட்டார்.

அந்த காலகட்டத்தில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான உதயபிரகாஷ் என்பவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். உதயபிரகாஷின் நடவடிக்கைகளை பார்த்த சுபஸ்ரீ அவர் மீது வெறுப்படைந்து அவரை ஒதுக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதய்பிரகாஷை சுபஸ்ரீயை பழிவாங்குவதற்கு திட்டம் தீட்டினார். 

அதன்படி காதலித்த போது ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்கள் பலவற்றில் வேகமாக பரவியது. இதனால் மனமுடைந்த சுபஸ்ரீ உதயபிரகாஷின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்தார். இதனால் இன்னும் ஆத்திரமடைந்த உதயபிரகாஷ், 24-ஆம் தேதியன்று சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது சுபஸ்ரீகாக பணிந்து பேசிய அவருடைய சகோதரி கலைமதியை உருட்டுக்கட்டையால் அடித்துள்ளார். பின்னர் சுபஸ்ரீயையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் அனைவரும் பார்த்துள்ளனர். இதனால் மிகவும் மன வேதனை அடைந்த சுபஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 

தீயின் தாக்கத்தை தாங்கி கொள்ள இயலாததால் சுபஸ்ரீ அலறியடித்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அப்பகுதி காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இறப்பதற்கு முன்னர் மரண வாக்குமூலம் பெறுவதற்கு முயற்சி செய்தனர். 

ஆனால் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற இயலவில்லை. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.