வாயில் நுரை..! மயக்கம்..! ஓட்டல் ரூமில் உயிருக்கு போராடிய இளம் காதல் ஜோடி! 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட விபரீதம்!

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி 3 நாட்களுக்குப்பிறகு உயிரிழந்த சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு என்னும் இடம் அமைந்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த விஷ்ணு என்ற 22 வயது இளைஞர் மங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்தார். இவரைப் போன்றே கேரளாவிலிருந்து வந்த கரிஷ்மா என்ற 22 வயது இளம்பெண் வேறொரு கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் இவர்களுடைய காதல் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் காதல் ஜோடி விரக்தியில் ஆழ்ந்தனர். மேலும் இருவராலும் ஒன்றாக இணைந்து தான் வாழ முடியவில்லை, ஆனால் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற விபரீதமான முடிவை எடுத்துள்ளனர்.

மங்களூரு ரயில்வே நிலையத்திற்கு அருகேயுள்ள ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். விரக்தியின் உச்சத்திலிருந்த காதல் கதை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அதிர்ச்சியாக பார்த்த ஹோட்டல் பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, அவர்களை அருகிலுள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். 3 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவமானது மங்களூரு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.