பள்ளிக்கூட வயசில் காதல்..! கர்ப்பம்..! கண்டுபிடித்த அக்கா உல்லாசத்துக்கு இடையூறு! கொலைகாரியான தங்கை! அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பம்!

நாமக்கல்: காதலுக்கு இடையூறாக இருந்த அக்காவை சொந்த தங்கையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி தேவேந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரன். இவரது மனைவி வத்சலா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்களும் உள்ளனர். இதில், மூத்த மகள் மோனிஷா தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை அருகாமையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்லாமல்  வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.திடீரென கடந்த 24ம் தேதி மோனிஷா கை அறுபட்ட நிலையில் ரத்தம் வடிய படுக்கையில் கிடந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக, மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால்,  மோனிஷா வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அதுபற்றி விசாரித்த போலீசார், மோனிஷா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று முடிவு செய்தனர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மோனிஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரது சகோதரர் மணிகண்டன், இதுபற்றி போலீசார்  விரிவாக விசாரிக்க வேண்டும் என, புகார் செய்தார்.

இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்கையில், மோனிஷாவின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றதாக, தெரியவந்தது. இதையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று ராகுல் என்ற இளைஞர், தங்களது வீட்டில் இருந்து தப்பியோடியதாக மோனிஷாவின் பெற்றோர் தெரிவித்தனர். உடனடியாக, அந்த ராகுலை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது, இந்த கொலையில் மோனிஷாவின் தங்கைக்கு தொடர்பு உள்ளதாக அந்த நபர் கூறவே, உடனடியாக, 12ம் வகுப்பு மாணவியை பிடித்து விசாரித்துள்ளனர்.  இதன்படி, ராகுலும், அந்த மாணவியும் கடந்த 3 ஆண்டாக, காதலித்து வந்துள்ளனர். இதனை மோனிஷா மற்றும் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.ஆனாலும் அடங்காத சிறுமி, மாணவனை அடிக்கடி வீட்டிற்கே அழைத்து பழகி வந்துள்ளார். இதில், அவர் கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகிறது. வேறு வழியின்றி அவரை, குடும்பத்தினர் ஒதுக்கி வைத்துவிட்டனராம். யாரும் அவரிடம் பேச மாட்டார்களாம்.

இதனால்,  தனிமையில் வாடிய மாணவி, கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, தனது அக்காவை கொல்ல தீர்மானித்தார். இதற்காக, காதலன் ராகுலை வீட்டிற்கு அழைத்து வந்து, இருவரும் சேர்ந்து மோனிஷாவை கழுத்தை நெரித்துக் கொன்றனர். பிறகு, அவரது கையை பிளேடால் அறுத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் என, குடும்பத்தினரை நம்ப வைத்துள்ளனர். ராகுலும் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம்.  குற்றம் உறுதியானதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.