காதல் கன்பார்ம்! கவினுடன் கல்யாணம் எப்போது? நாள் குறித்த லாஸ்லியா வெளியிட்ட தகவல்!

பிக் பாஸ் சீசன் 3 பைனலில் மூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் தன் திருமணத்தை பற்றி பேசியுள்ளார் .


இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ளார் . பிக் பாஸ் சீசன் 3 தொடக்கம் முதலே எந்தப் பிரச்சினைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் நடுநிலையாக இருந்த லாஸ்லியா வுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியது. பின்னர் கவின் உடன் ஏற்பட்ட காதலினால் லாஸ்லியா தனது தனித்துவத்தை இழக்க ஆரம்பித்தார் .போட்டியில்  அதிக அளவு கவனம் செலுத்த முடியாமல் கவின் உடன்  அதிக நேரம் செலவழித்துக் கொண்டிருந்தார் .

ஒருகட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு லாஸ்லியாவின் அப்பா நுழைந்தபோது லாஸ்லியாவை அவர் கண்டித்தார். இதனால் போட்டியில் மீண்டும் சிறிது கவனம் செலுத்த ஆரம்பித்தார் லாஸ்லியா. எனினும் பிக்பாஸ் வீட்டைவிட்டு கவின் வெளியேறியபோது லாஸ்லியா கதறி அழுதார் .

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு லாஸ்லியா தனது திருமணம் பற்றிய கருத்து தெரிவித்துள்ளார் . என் காதலுக்கு என் குடும்பத்தினர் மிக விரைவில் சம்மதம் சொல்வார்கள் என நம்பிக்கை உள்ளதாக லாஸ்லியா கூறியுள்ளார். என் அப்பா அம்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் எனவும் அந்த கதைகளை கூறி தான் என்னை வளர்த்தார்கள் எனவும் லாஸ்லியா கூறியுள்ளார். மேலும் என் அப்பா அம்மா சம்மதத்தோடு மட்டுமே என் திருமணம் நடைபெறும் எனவும் லாஸ்லியா கூறியுள்ளார்.