பிக்பாஸ் வீட்டில் செம ரகளை! கதறி அழும் பிரபல 'ஆர்மி' நடிகை! இன்று வெய்ட்டு தான்.

லாஸ்லியா அழுது கொண்டிருப்பதாக வெளியாகியுள்ள பிக்பாஸ் ப்ரோமோ வீடியோக்கள் அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி அளித்துள்ளன.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. சென்ற வாரம் நடிகை மதுமிதா தற்கொலை செய்து கொள்ள முயன்றதற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனிடையே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

முதல் வீடியோவில், பிக்பாஸ் லாஸ்லியாவிடம் யார் இருவரை வெளியேற்றுவதற்காக நாமினேட் செய்யப்போகிறார் என்று  கேட்கிறார். அதற்கு அவர் 2-வது நபராக இயக்குனர் சேரனை தேர்வு செய்கிறார்‌.

இதனால் சேரன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். "எந்த நிலையிலும் உங்களை நாமினேட் செய்ய மாட்டேன்" என்று கூறிவிட்டு இவ்வாறு செய்துவிட்டதாக கஸ்தூரியிடம் கூறி‌ புலம்பினார்.

லாஸ்லியா கூறும்போது "சென்ற வாரத்தில் வீட்டில் நடந்த பிரச்சனைகளில் சேரன் அவர்கள் பொறுப்பேற்கவில்லை. நான் கூறிய வற்றுக்கும் அவர் பதிலளிக்கவில்லை. அதனால் அவரை தேர்வு செய்கிறேன்" என்று கூறினார்.

2-வது வீடியோவில், லாஸ்லியா கவின் மற்றும் தர்ஷனிடம் அழுது புலம்புகிறார். "சென்ற வாரம் ஜெயில் டாஸ்க் போது சேரன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. இப்ப தப்பு என் மேலயா சேரன் மேலயா" என்று புலம்பி அழுது கொண்டிருந்தார்.

லாஸ்லியா அழுவதை கண்ட அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருந்துகின்றனர்.