பெற்றோரை வழியனுப்பிவிட்டு கவியுடன் லாஸ்லியா செய்த காரியம் பற்றி தெரியுமா ?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த பெண்ணான லாஸ்லியா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது கவின் , லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம்தான். 

கடந்த சில வாரங்களாகவே நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வந்து அவர்களை ஊக்குவிப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர் . இந்நிலையில் லாஸ்லியாவின் பெற்றோரும் இலங்கையிலிருந்து அவரைக் காண்பதற்காக வந்திருந்தனர் .

அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனே லாஸ்லியாவிடம் கவின் உடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கோபமாக கேட்டனர். இதனால் பிக்பாஸ் வீடு பரபரப்பு நிறைந்த இடமாக மாறியது. மேலும் கவின் உடன் பேசும் பழக்கத்தை விட்டுவிட்டு போட்டியில் அவளை கவனம் செலுத்துமாறு அவருக்கு அறிவுரை கூறி சென்றனர். பெற்றோர்களின் வார்த்தைக்கு மதிப்பளித்து இதற்கு சம்மதம் தெரிவித்தார் லாஸ்லியா.

லாஸ்லியாவின் பெற்றோர் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே சென்ற அடுத்த நொடியே லாஸ்லியாவின் கவினும் மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டனர். கவினிடம் சென்று தன் பெற்றோரிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கூறியிருந்தார்.. மேலும் தன் பெற்றோரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு மன்னிப்பும் கேட்டு இருந்தார். நீண்ட நேரமாக பேசியிருந்தா அவர்கள் இருவரும் இறுதியில் விளையாட்டை முதலில் விளையாட ஆரம்பிப்போம் என்று ஒரு முடிவிற்கு வந்தனர். 

இந்த சம்பவம் லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப்பேசப்பட்டது தற்போது அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.