பட்டாசுகளுடன் வந்து பற்றி எரிந்த லாரி! சென்னை அருகே நடுரோட்டில் திகில் சம்பவம்! பொதுமக்களுக்கு நேர்ந்த விபரீதம்!

பட்டாசு ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவமானது தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வருடந்தோறும் தீபாவளிக்கு சிவகாசியிலிருந்து பட்டாசுகள் லாரியில் கொள்முதல் செய்யப்படும். ஆங்காங்கே தொழிலாளர்கள் கடைகளை போட்டு விற்பனை செய்வர்.அதுபோன்று இன்று சிவகாசியிலிருந்து லாரியில் பட்டாசுகள் லாரியில் ஏற்றப்பட்டு வந்து கொண்டிருந்தன. 

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் லாரி வேகமாக சென்று கொண்டிருந்த போது அருகில் வந்த லாரி, பட்டாசு ஏற்றிவந்த லாரியின் மீது உரசியுள்ளது. அப்போது பட்டாசு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக லாரியிலிருந்து ஓட்டுநரும், கிளீனரும் லாரியைவிட்டு ஓடிவிட்டனர்.

வெயில் மற்றும் காற்றின் ஆதிக்கத்தால் லாரி முழுவதும் தீ வேகமாக பரவியது. லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி கொண்டிருந்தன. இதனால் லாரிக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் கடுமையாக அச்சம் அடைந்தனர். பல மணிநேரம் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் அங்கேயே நின்றுவிட்டன. இதனால் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். கண்ணெரிச்சல் ஆகியவை அப்பகுதி மக்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவமானது சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.