அடித்தது யோகம்! 4வது வீரராக களம் காணும் லோகேஷ் ராகுல்! விஜய் சங்கர் வாய்ப்பு பறிபோனது!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களை குவித்தது. இந்திய அணியின் லோகேஷ் ராகுல் மற்றும் தோனி அபாரமாக விளையாடி சதமடித்தனர். நேற்றைய போட்டியில் லோகேஷ் ராகுல் 4வது வீரராக களமிறக்கப்பட்டார். நீண்ட நாட்களாக இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் எந்த வீரர் 4 வதாக களம் இறக்கலாம் என்ற குழப்பம் நிலவி வருகிறது.

லோகேஷ் ராகுலின் இந்த அபார சதத்தின் மூலமாக இவர் இந்திய அணியின் 4வது வீரராக உலககோப்பை தொடரில் களமிறக்க வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. இந்த போட்டியில் விஜய் ஷங்கர் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை அணியில் தேர்வும் செய்யும் போதே விஜய் ஷங்கர் 4வது வீரரக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அனால் ipl  தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு அவர் சரியாக விளையாடாததால் யாரை அந்த இடத்திற்கு களமிறக்கலாம் என்ற குழப்பம் நிலவி வந்தது.

லோகேஷ் ராகுலின் இந்த அபாரமான ஆட்டத்தின் மூலமாக அவருக்கே 4வது இடத்தில் இறங்க வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கப்படலாம் என தெரிகிறது.