சென்னை எக்மோரில் உள்ள சரவணபவன் ஹோட்டலில் பரிமாறப்பட்ட கிச்சடியில் உயிருடன் புழுக்கள் நெளிவதைப் பார்த்த வாடிக்கையாளர் மிகவும் அதிர்ச்சி அடைந்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
சரவணபவன் கிச்சடியில் உயிர் உடன் நெளியும் புழுக்கள்..! அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்..!
சரவணபவன் என்றாலே உயர்தரமான சைவ உணவகத்திற்கு பெயர்போன உணவகம் ஆகும். இந்த உணவகத்திற்கு பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த உணவகத்திற்கு தொடர்ச்சியாக ஒரு தனி வாடிக்கையாளர் கூட்டமே இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் ரவா கிச்சடி ஆர்டர் செய்திருக்கிறார். அந்த வாடிக்கையாளருக்கு உயிருடன் நெளிந்து கொண்டிருந்த புழுக்களுடன் உணவு பரிமாறப்பட்டது. அதனை பார்த்த அந்த வாடிக்கையாளர் மிகவும் கோபம் அடைந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்களை அழைத்து இதனைப் பற்றி கூறும் போது அவர்கள் திமிராக பதில் அளித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அந்தப் புழு வெளியில் இருந்துதான் உணவில் வந்துள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அந்த வாடிக்கையாளர் அதனை முற்றிலுமாக மறுத்திருக்கிறார் .
மேலும் அவர் உயிருடன் அந்த புழு நெளிந்து காணப்படும் உணவுடன் கூடிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோவானது வைரலாக பரவி இருக்கிறது.