மதுரையில் மருதுபாண்டி நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாள் ஒட்டி மது கடைகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! அடுத்த 3 நாட்களுக்கும் கடைகள் லீவு! அதிர்ச்சியில் குடிமகன்கள்!
ஆண்டுதோறும் மருதுபாண்டி நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் ஆகியவை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் வரும் 27 ஆம் தேதி சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு தினம் கொண்டாடப்பட உள்ளது . இதேபோல் ராமநாதபுரத்தில் வரும் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளும் கொண்டாடப்பட உள்ளது.
பல ஆண்டு காலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழா இந்த ஆண்டும் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது , இதனையொட்டி அண்டை மாவட்டமான மதுரை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு வரும் 27, 28,29,30 ஆகிய நான்கு தேதிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த அறிவிப்பை மதுரை மாவட்ட ஆட்சியாளர் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதற்காக அதிரடியாக வெளியிட்டுள்ளார். ஆட்சியரின் அறிவிப்பை மீறி மதுபானங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான விற்பனை 4 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் பலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.