உலகம் முழுவதும் தமிழின் புகழ் பரவட்டும்! ஜெயலலிதா சொன்னதை நிறைவேற்றிக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. .

தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.


ஜெயலலிதாவால் கடந்த 13.9.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். 

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு. மொழிபெயர்ப்பு பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், முதற்கட்டமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 19.2.2019 அன்று வெளியிட்டார்கள். 

அதன் தொடர்ச்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.9.2020 அன்று வெளியிட்டார்கள். உலகம் முழுவதும் தமிழின் புகழ் பரவட்டும்.