சவூதியில் பெண்ணும் பெண்ணும் காதலித்தால்...! என்ன நடக்கும் தெரியுமா?

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை தம்பதியினர் லண்டனுக்கு தப்பி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெண்களுக்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கடுமையான விதிகளை விதிக்கின்றனர். சவுதி அரேபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பெண்கள் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்படி சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு ஈடுபடுவது வெளியே கசிந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருவரும் 2018-ஆம் ஆண்டில் அங்கிருந்து தப்பி லண்டன் நகரத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

தற்போது இவர்கள் சவுதி அரேபியா ஊடகமொன்றிற்கு தங்களுடைய கதையை விவரித்துள்ளனர். அதாவது, ஃபாத் மற்றும் நேன்ஸ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேன்ஸ் உடலில் இந்த மாற்றங்கள் முன்னதாகவே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வீட்டில் எதுவும் தெரிவிக்காமல் மறைத்து வந்தார். 

இதனிடையே, 2018-ஆம் ஆண்டிலிருந்து இருவரும் மிகவும் தீவிரமாக ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அரசாங்கத்திடம் சிக்கி கொள்வோமோ என்ற அச்சத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு அகதிகளாக தப்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த செய்தியானது சவுதிஅரேபியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.