உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

வீட்டுத் தோட்டத்தில் முளைக்கக்கூடிய எலுமிச்சைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதனை குறைந்த விலை மருத்துவர் என்றே சித்தமருத்துவம் அழைக்கிறது.


  • உடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும்.
  • வாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும்.
  • நீர் மோரில் எலுமிச்சம் பழம், இஞ்சி, பெருங்காயம், கொத்தமல்லி இலை கலந்து குடித்தால் மந்தம், நரம்புத்தளர்ச்சி, வாய்வு பிரச்னை நீங்கும்.
  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடித்தால் உடல் அரிப்பு, அலர்ஜி போன்றவை நீங்கிவிடும்.