தூக்கு தண்டனையை நிறைவேற்றியவரிடம் நிர்பயா குற்றவாளிகள் கூறிய கடைசி வார்த்தை..! ஆனால்..? திஹாரில் திகில் சம்பவம்!

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கில் இடப்படுவதற்கு முன்னர் தூக்கில் ஏற்றுபவரிடம் ஒரே மாதிரியான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.


அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால் குற்றவாளிகள் நான்கு பேரையும் அதிகாலை 4 மணிக்கே சிறைக்காவலர்கள் சென்று எழுப்பியுள்ளனர். விடிய விடிய தூங்காமல் இருந்த நான்கு பேரும் குளித்து முடித்து சிறை உடைக்கு மாறி போலீசார் அழைத்துச் சென்ற இடத்திற்கு சென்றனர்.

நான்கு பேருமே மிகவும் சோகமாகவும் அவ்வப்போது கதறியபடியும் இருந்துள்ளனர். தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டதும் நான்கு பேரும் ஒரே நேரத்தில் கதறியுள்ளனர். தங்களை தூக்கில் ஏற்ற வேண்டாம் என்று அவர்கள் அழுது புலம்பியுள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு தலையில் துணி கொண்டு மூடப்பட்டது.

ஒரு கட்டத்தில் நான்கு பேருமே தூக்கில் ஏற்றும் பணியை செய்யும் ஜலாட்டிடம் தங்களுக்கு கருணை காட்டும்படியும் தயவு செய்து தூக்கில் ஏற்ற வேண்டாம் என்று கெஞ்சியுள்ளனர். ஆனால் ஜலாட் நேரம் சரியாக 5.30 மணி ஆனதும் நீதிபதியிடம் இருந்து கிடைத்த உத்தரவின் அடிப்படையில் அவர்களை தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.