லலிதா ஜூவல்லரி கொள்ளை..! இன்ஸ்பெக்டருக்கு கத்தை கத்தையாக ரூ.30 லட்சம் லஞ்சம்! எய்ட்ஸ் முருகன் பகீர் வாக்குமூலம்!

லலிதா ஜுவல்லரி கொள்ளையில் ஈடுபட்ட முருகன் காவல்துறையினருக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காந்தி ஜெயந்தி அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் 13 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் முதன்முதலில் காவல்துறையினர் மணிகண்டன் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவனிடமிருந்து நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவனுடைய வாக்குமூலத்தின்படி சுரேஷ் ரூம் முருகன் ஆகியோரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. காவல்துறையினர் சென்னை அதிதீவிரமாக தேடுவதை அறிந்து கொண்ட சுரேஷ் அவர்களிடம் சரணடைந்தான். 

பின்னர் காவல்துறையினர் முருகனை தேடி வந்தனர். கர்நாடகா ஆந்திரா ஆகிய பல மாநிலங்களில் தன் கைவரிசையை காட்டிய முருகன் காவல்துறையினரிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்தான். திருடிய நகைகள் அனைத்தையும் காவிரி ஆற்றுப்படுகையில் முருகன் மறைத்து வைத்திருந்தான். காவல்துறையினர் தன்னை பல மாநிலங்களில் தேடி வருவதை உணர்ந்த முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான்.

முருகனிடம் பெங்களூரு காவல்துறை அதிகாரிகள் கடுமையான விசாரணையில் ஈடுபட்டனர். ஒரு வழியாக சில நாட்களுக்கு முன்னர் திருடப்பட்ட 13 கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்த வீடியோவை காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது முருகன் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை தெரிவித்து வருகிறான். கடந்த ஆண்டு முழுவதிலும் 17 கொள்ளை சம்பவங்களில் முருகன் ஈடுபட்டுள்ளான். அவற்றில் தன்னையும் தன்னுடைய கூட்டாளிகளையும் கைது செய்யாமல் இருப்பதற்காக எழும்பூர் காவல்துறை ஆய்வாளர் ஒருவரிடம் இதுவரை 30 லட்சம் ரூபாயை லஞ்சமாக வழங்கியுள்ளான்.

சென்னையில் உள்ள பிரபல காஃபி ஷாப் ஒன்றில் வைத்து அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்ததாக கூறியுள்ளான். மேலும் பெங்களூருவில் உள்ள பிரபல தொழிலதிபர் வீட்டில் திருடிய போது உபயோகப்படுத்திய ஹூண்டாய் ஐ-30 ரக காரை பறிமுதல் செய்வதற்காகவும் காவல்துறையினர் முருகனை சென்னை அழைத்து வர திட்டமிட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு லஞ்சம் அளித்திருப்பதாக முருகன் கூறியுள்ளது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.