கடன் வாங்கிவிட்டு தீக்குளித்த பெண்! காப்பாற்றச் சென்ற கடன் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

நாகர்கோவிலில் பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தன்னிடம் கடன் வாங்கியவரை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாகர்கோவிலில் வசிக்கும் அம்பிகா என்பவர் சுய உதவிக்குழு ஒன்றை தொடங்கினார். இவரிடம் அப்பகுதிக்கு அருகே அமைந்துள்ள ராமன்புதூர் என்னும் பகுதியை சேர்ந்த தங்கம் என்ற பெண் சுமார் 4 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். வட்டியையும், அசலையும் தங்கத்தினால் சரிவர திருப்ப இயலவில்லை.பல நாட்கள் இப்படியே நகரந்துக்கொண்டிருந்நன. நேற்று விரக்தி அடைந்த அம்பிகா எப்படியாவது கடனை வசூலித்து விடவேண்டும் என்று புறப்பட்டார்

அப்போது தங்கம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கண்டு நடுங்கிய அம்பிகா, தடுக்க முயன்றார்.அப்போது எதிர்பாராத விதமாக இருவரது உடலிலும் தீப்பிடித்தது. இதில் அம்பிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 95 சதவீத தீக்காயங்களுடன் தங்கம், உயிருக்குப் போராடி வருகிறார்.

இதில் ஒரு துயரமான செய்தி என்னவென்றால்,  அம்பிகாவின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க‌ உள்ளது. இந்நிலையில் இந்த கோர சம்பவத்தினால் அம்பிகா உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.