ஸ்கூட்டியில் 3 பெண் போலீசார் ட்ரிபிள்ஸ்..! எதிரே அசுர வேகத்தில் வந்த டேங்கர் லாரி..! கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய பயங்கரம்!

டூவீலரில் சக பெண் காவலர்கள் இருவருடன் ட்ரிபிள்ஸ் சென்று கொண்டிருந்த பெண் காவலர் மீது எதிரே அசுர வேகத்தில் வந்த டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அந்த பெண் காவலர் உயிரிழந்தார்.


சென்னை ஆயுதப் படையை சேர்ந்த பெண் காவலர் பவித்ரா நந்தனத்தில் பணிபுரிவதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் சக பெண் காவலர்கள் இருவருடன் சேர்ந்து ட்ரிபிள்ஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது பாரதி சாலையில் இருந்து சென்னை கடற்கரை சாலைக்கு திரும்பும்போது அந்த வழியில் அதிவேகத்தில் வந்த டேங்கர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் பெண் காவலர் வந்த வண்டியின் மீது மோதியதில் அந்தப் பெண் காவலர் பவித்ராவின் தலை லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே அந்தப் பெண் போலீசார் உயிரிழந்துள்ளார்.

 சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் வேகமாக செல்வதாக புகார் வந்துகொண்டிருக்கும் நிலையில் சென்னை கடற்கரை அருகே ஏற்பட்ட இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.