உயிரிழந்த மகளை 4 வருடங்களுக்கு பிறகு சந்தித்த தாய்..! நெகிழ வைக்கும் புதிய தொழில்நுட்பம்..! கண் கலங்க வைக்கும் சம்பவம்!

இறந்த தன் மகளை வர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்தத தாயின் வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கொரிய நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இதுவரை கண்டறியப்படாத ரத்த நோய் என்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்ததை அடுத்து அவரது மறைவால் அவரது குடும்பம் மிகவும் சோகத்தில் மூழ்கியிருந்தது. மேலும் அந்த சிறுமியின் தாய் ஜாங் ஜி-சங்  என்பவர் மிகவும் கவலையோடு வாழ்ந்து வந்தார்.

ஜாங் ஜி-சங் இவருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. இவர் தொழில்நுட்பத்தின் மூலம் இழந்த தன் மகளைப் பார்த்து சந்தோஷத்தில் திகைத்து உள்ளார். "Meeting You" எனப்படும் ஒரு தென்கொரிய ஆவணப்படக்குழு, 9 வயதில் உயிரிழந்த அந்த சிறுமியை ரியாலிட்டி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திரைக்குப்பின்னால் 3டி படத்தை உருவாக்கியுள்ளனர்.

பச்சை திரைக்குப் பின்னால் இருந்த அந்த சிறுமியின் தாயார் ஜாங் ஜி-சங் தன் மகளை பார்த்த பொழுது மிகவும் நெகிழ்ச்சியான தருணங்களை அங்கிருந்து அவருக்கு ஏற்படுத்தியது. பிறந்த குழந்தையை அவரது தாய் பார்க்கும் அந்த உணர்வுபூர்வமான சம்பவத்தை ஆங்கில தொலைக்காட்சி ஒன்று தன்னுடைய நிகழ்ச்சியின்போது வெளியிட்டது. தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

தாய் திரைக்குப் பின்னால் தோன்றும் தன் மகளின் முகத்தை பார்க்கும் பொழுது கண்ணீர் சிந்தும் வீடியோக்கள் பார்ப்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது என்று தான் கூற வேண்டும். கொரியாவில் இந்த வீடியோ பதிவு பல மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து உள்ளது. பிரிவால் வேதனையோடு காணப்படும் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.