இரவில் நைட்டியுடன் வீட்டில் இருந்து புறப்பட்ட பெண்..! சடலமாக திரும்பிய பயங்கரம்! சென்னை பரபரப்பு!

சென்னையில் மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட தீ பரவியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த லீமா ரோஸ் என்பவர் நேற்று முன்தினம் இரவு மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது மின்கசிவு காரணமாக சாலையோரத்தில் இருக்கும் மின்பெட்டியில் தீ பிடித்துள்ளது. அப்போது லீமாரோஸ் அந்த வழியே நடந்து செல்ல, மின்பெட்டியில் இருந்த தீப்பொறி லீமாரோஸ் மீது பட்டு தீப்பிடிக்க தொடங்கியுள்ளது.

இதனால் அவரது நைட்டி எரிய ஆரம்பித்தது. இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிய வலியால் துடித்துள்ளார், உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர் லீமா ரோஸை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் லீமாரோஸ்.

இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள சூளைமேடு பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லீமா ரோஸ் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் ஆதரவின்றி இருந்த அவரது மகனை காவல்துறையினர் அரசு காப்பகத்தில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.