மூச்சு முட்டி நடு ரோட்டில் பொத்து பொத்து என மயங்கி விழுந்த பெண்கள்..! கதறிய குழந்தைகள்! 5000 பேர் பாதிப்பு..! அதிர்ச்சியில் ஆந்திரா!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல் ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் குழந்தைகள் ,பெண்கள் உட்பட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர் ஆர் வேங்கடபுரம் என்ற கிராமத்தில் 1961 ஆம் ஆண்டு முதல் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு வெடிப்பு சத்ததுடன் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ரசாயன தொழிற்சாலையில் இருந்து நச்சுப் புகை தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தது. இதனால் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த வீட்டிலிருந்த ஒரு குழந்தை உட்பட 13 பேர் நச்சு புகை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் இந்த விஷ வாயு தொழிற்சாலைக்கு அருகில் இருந்த கிராமங்களுக்கும் பரவியது. இதனால் அந்த கிராமங்களில் வெளியே நடமாடிக் கொண்டிருந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் சாலையிலேயே மயங்கி விழுந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 5000 த்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்கள் கார் மற்றும் கிடைக்கும் வண்டிகளில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்த விஷவாயு கசிவிற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. தற்போது தீயணைப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தேசிய மற்றும் பேரிடர் மீட்பு குழு அந்த பகுதியில் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.