எப்படி இருந்த குஷ்பு மகள்..! உடல் எடை குறைந்து இப்படி ஆகிவிட்டார்..?! காரணம் அந்த ஒற்றை வார்த்தை! என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் மகளான ஆனந்திகா திடீரென்று அதிரடியாக உடல் எடையைக் குறைத்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


நட்சத்திர ஜோடியான சுந்தர்.சி மற்றும் குஷ்பு தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் இளைய மகள் அனந்திகா சுந்தர் என்பவர் திடீரென்று அதிரடியாக தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார். பொதுவாகவே குஷ்பு தன்னுடைய மகள்களுடனும் கணவருடனும் இணைந்து அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார். மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்க தற்போது குஷ்புவின் இளைய மகள் அனந்திகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூட கூறலாம். அதாவது அனந்திகா அந்த புகைப்படத்தில் தன்னுடைய உடல் எடையை மிகவும் குறைத்து ஒல்லியாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறார். அதனை பார்க்கும் பொழுது அவரது உடல் வாகை கிண்டலடித்த நெட்டிசன்களுக்கு சிறந்த பதிலடியாக இருக்கும் என தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் தனது தாயுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் "உன் மகள் டால் இல்லை பிக் அதாவது பன்றி " என்று விமர்சித்து இருந்தார். இதனை தொடர்ந்தே குஷ்பு மகள் மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ளார். 

மேலும் சமீபத்தில் அனந்திகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் புகைப்படத்தையும் தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவரது உடல் எடையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மிகவும் தெளிவாக தெரிகிறது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக பலரும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.