பிரச்சார மேடையில் கதறி அழுத குமாரசாமி! தொண்டர்கள் அதிர்ச்சி! காரணம் இதுதான்!

தேர்தல் பிரச்சார மேடையில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுத சம்பவமானது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


2019 லோக்சபா தேர்தலில் அப்போது முதலமைச்சராக இருந்த குமாரசாமி அவர்கள் தனது மகன் நிகில் கவுடாவை மாண்டியா தொகுதியில் களம் இறக்கினார். ஆனால் குமாரசாமியின் மகன் இந்த தொகுதியில் தோல்வி அடைந்து குமாரசாமிக்கு அதிர்ச்சி அளித்தார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் குமாரசாமி அரசுக்கு ஆதரவு தந்த 17 கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏ க்கள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. ராஜினாமா செய்த அவரது கட்சி எம்எல்ஏக்களில் கேஆர் பேட் தொகுதியைச் சார்ந்த நாராயணா கவுடாவும் ஒருவராவார்.

இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி கர்நாடகாவில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் நாராயண கவுடா தேர்தலில் களமிறங்குகிறார். இந்த தேர்தலில் தனது முழு பலத்தை காட்ட முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி அவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று கே ஆர் பேட் தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த குமாரசாமி அவர்கள், நாராயண கவுடா தனக்கு எழுதிய கடிதத்தை வாசித்து காட்டினார். அந்த கடிதத்தில் நான் ரெண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட நீங்கள் எனக்கு வாய்ப்பு தந்தீர்கள் . இந்த ஜென்மம் முழுவதும் நான் நன்றியோடு இருப்பேன் எனவும் அந்த கடிதத்தில் நாராயண கவுடா கூறியதாகவும் குமாரசாமி தெரிவித்தார்.

இதை நினைக்கும் போதுதான் எனக்கு கண்ணீர் வருகிறது என்று கூறி மேடையிலேயே அவர் கண் கலங்க ஆரம்பித்தார். நான் தேர்தலில் தோற்று விட்டதால் அழவில்லை. நான் மிகவும் நம்பியிருந்த மாண்டியா மக்களே என்னை கைவிட்டு விட்டார்கள் என்ற கவலையில் தான் நான் அழுகிறேன்.

மாண்டியாவில் தோற்றது முதல் நான் அரசியலில் இருக்க வேண்டுமா என்று யோசித்து வந்தேன். ஆனால் ஏழை எளிய மக்களுக்காகவே நான் என்னும் அரசியலில் இருந்து போராடி வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் இந்தப் பேச்சைக் கேட்ட அப்பகுதியில் உள்ள மக்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.