கமலஹாசன் கட்சி நேர்காணலில் கோவை சரளா!! தமாஷாகிப் போன புரோகிராம்!

கட்சி நடத்துவதை காமெடியாக செய்துவரும் கமல்ஹாசனின் சமீபத்திய சாதனை அத்தனை கட்சிக்காரர்களையும் அதிர வைத்துள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்க ஆர்வம் காட்டியவர்களை நேர்காணலுக்கு அழைத்தார். அப்படி நேர்காணலுக்கு வந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனென்றால் அங்கே அமர்ந்திருந்த ஆட்கள் அப்படி. நேற்று கட்சியில் சேர்ந்த கோவை சரளா கமலஹாசனுக்கு இணையாக அமர்ந்து கேள்விகள் கேட்கிறார்.

அதேபோன்று வேலை இல்லாமல் வீட்டில் ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் பழைய பெருங்காய டப்பாக்களான ஓவியர் மதன், பத்திரிகையாளர் ராவ் ஆகிய பழம் பெருச்சாளிகளும் ஆஜராகிவிட்டனர்.

இதுதவிர மகேந்திரன், அருணாசலம் போன்ற கட்சி ஆட்களும் ஆஜராகி, ஆளுக்கொரு பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு மார்க் போட்டுக்கொண்டு இருந்தனர்.

விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கருக்கு நுழைவுத் தேர்வுக்குப் போன மாதிரியே இருந்திச்சுங்க, கோவை சரளா நல்லா ஜாலியா பேசுறாங்க, கமல்ஹாசன் சிரிக்கவே மாட்டேங்கிறார் என்பதுதான் உள்ளே போய் வெளியே வந்தவர்களின் கமெண்ட்.

ஆமா, கட்சி நடத்துறாரா இல்லைன்னா விஜய் டி.வி.க்கு புரோகிராம் நடத்துறாரான்னே புரியலையே...