பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் கோவை இளம் பெண்! என்ன படம் தெரியுமா?

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி .பிரகாஷின் புதிய திரைப்படமான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.


தற்போது ஜிவி பிரகாஷ் அறிமுக இயக்குனரான சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கோயம்புத்தூர் மாடல் அழகி திவ்யபாரதி நடிக்கவுள்ளார். 

இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கப் போவது குறித்து மாடல் திவ்யபாரதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் நான் முதன் முதலில் ஜீவி .பிரகாஷ் உடன் இணைந்து சினிமா துறையில் கால் பதிக்க உள்ளேன்

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பெயர் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். அதுவும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போவவது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆவார்.