உயிருடன் இருந்த குரங்கை ஒரே வாயில் விழுங்கிய ராட்சத பல்லி! அதிர வைக்கும் வீடியோ!

ராட்சத பல்லி ஒன்று உயிருடன் இருக்கும் குரங்கை விழுங்கியிருக்கும் சம்பவமானது இந்தோனேஷியா நாட்டில் அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


கொமாடோ என்பது ஒரு வகையான பல்லி உயிரினமாகும். இந்த பல்லிவகை இந்தோனேசியா நாட்டின் காடுகளில் மட்டும் காணப்படுகின்றது. இந்த அரிய வகை உயிரினத்தை ஆய்வு செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அவர்களில் சிலர் இந்தோனேசியா நாட்டின் காட்டுப் பகுதிக்கே சென்று தொலைவிலிருந்து அந்த பல்லி உயிரினத்தினை ஆய்வு செய்து வருகின்றனர். ஒரு மரத்தின் அடிப்பகுதியில் அனுமன் மந்தி என்ற குரங்கு மயக்க நிலையில் இருந்தது. மரத்தின் மேலிருந்த கொமாடோ பல்லி உயிரினம் ஒன்று குரங்கு மயக்க நிலையில் இருக்கும்போதே அதனை உயிருடன் விழுங்கியுள்ளது.

இந்த வீடியோவானது யூடியூபில் பரவி வருகிறது. காண்போர் நெஞ்சை பதற வைக்கும் அளவிற்கு இந்த வீடியோ அமைந்துள்ளது.