கரப்பான் பூச்சி தொல்லை தாங்கமுடியலையா..? விரட்டுவதற்கான ஈஸி வழிகள் இதோ!

தேங்காயை துருவி கண்ணாடி அல்லது கெமிக்கல் ஃபிரீ பிளாஸ்டிக் ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கலாம். இது ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.


தேங்காயை சில்வர் பாத்திரங்களில் போட்டு வைத்தால் அதில் எளிதாக நீர் ஊறி கெட்டு விடும். ஆகையால் சேமித்து வைத்து பயன்படுத்த நினைக்கும் எந்தவொரு உணவுப் பொருளையும் கண்ணாடி அல்லது கெமிக்கல் ஃபிரீ பிளாஸ்டிக் ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு வைப்பது நல்லது.

ஏர் டைட் கன்டெய்னரில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சம்பழம் அதில் முழுவதுமாக மூழ்கும் படி செய்து ஃபிரிட்ஜில் வைத்து எலுமிச்சையை சேமிக்கலாம். அல்லது டிஷ்யூ பேப்பரில் எலுமிச்சம் பழத்தை வைத்து உருட்டியும் சேமிக்கலாம்.

மசாலாவை பெரிய பெரிய பாக்கெட்டுகளில் வாங்கி விட்டு சின்ன சின்ன டப்பாக்களில் வைத்து தான் பயன்படுத்துகிறோம். மீதியுள்ள மசாலாவை சேமிக்க ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம் அல்லது ஏர் டைட் கிளிப்பை அந்த பாக்கெட்டை மூடும்படி செய்து ஃப்ரீசரில் வைக்கலாம்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும்போது ஏற்படும் கொழகொழப்பை குறைக்க சுலபமான வழி ஒன்று உள்ளது. நறுக்கிய வெண்டைக்காயுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து சமைத்தால் கொழகொழப்பு அனைத்தும் நீங்கி, பொரியல் உதிரியாக வரும்.

எந்த வகை வெரைட்டி ரைஸ் என்றாலும் அதில் சிறிதளவு வேர்க்கடலையை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல சாதத்தை ரெடி செய்து முடித்ததும் கடைசியில் சாதத்தை பரிமாறுவதற்கு முன்பாக வெந்தயத்தை வறுத்து பொடித்து போடலாம். இப்படி செய்தால் வெரைட்டி ரைஸின் சுவை கூடும்.

கிச்சன் மற்றும் வீட்டில் ஆங்காங்கே கரப்பான் பூச்சிகள் சுற்றித்திரிந்து நமக்கு தொந்தரவு தரும். கவலை வேண்டாம் அவற்றை விரட்ட சுலபமான வழி உள்ளது. கரப்பான் பூச்சி நடமாடும் இடங்களிலும் அவை வரும் இடங்களிலும் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஜாதிக்காய் பொடியை தூவுங்கள் இந்தப் பொடியின் மணத்துக்கு கரப்பான்பூச்சி வரவே வராது. ஜாதிக்காய் பொடி இல்லாவிட்டால் கற்பூரத்தையும் பொடித்து போடலாம். இப்படி செய்வதால் பூரான் போன்ற பூச்சிகளும் வராது.

அரிசியில் வண்டுகள் வராமல் இருக்க காம்பு நீக்காத ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் வண்டு வராது. வசம்பு 2 பீஸை எடுத்து அரிசியில் போட்டு வைத்தாலும் வண்டு வராது. ...

200 கிராம் பருப்புக்கு கால் டீ ஸ்பூன் என்ற விகிதத்தில் உப்பு சேர்த்து சேமித்து வைத்தால் பருப்பில் வண்டுகள் வராது. அப்படி சேமித்து வைக்கும் போது ஆட்டோமேட்டிக்காக உப்பு கீழே இறங்கிவிடும். தவிர பருப்பை நன்றாக கழுவி விட்டு தான் சமைப்போம் என்பதால் உப்பு பருப்பில் ஒட்டிக்கொண்டிருக்குமே என்ற பயம் வேண்டாம்.