23 மழலைகளுக்கு விஷ உணவு கொடுத்த கொடூர ஆசிரியை! கேட்போர் நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்!

சக ஆசிரியையுடனான பகை காரணமாக அவரை பழி வாங்க மழலையர் பள்ளிக் குழந்தைகள் 23 பேருக்கு விஷ உணவு கொடுத்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹெனான் மகாணத்தில் அந்த மழலையர் பள்ளி இயங்கி வந்தது. அங்கு3 முதல் 6 வயது வரையான குழந்தைகள் படித்தனர். அங்கு காலை உணவாக குழந்தைகளுக்கு கஞ்சி கொடுக்கப்பட்ட நிலையில் அதனை உண்ட சிறிது நேரத்தில் 23 குழந்தைகளூம் வயிற்று வலியால் துடித்தனர். சிலருக்கு வாந்தியும் ஏற்பட்டது. 

இதையடுத்து பள்ளி நிர்வாகம்,  குழந்தைகள் அனைவரையும் மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு  ஓடியது. மருத்துவர்களின் பரிசோதனையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் அதிக அளவில் சோடியம் நைட்ரேட் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இறைச்சியை  பதப்படுத்துவதற்கான இந்த வேதிப்பொருள் உணவில் அதிகமாக கலக்கப்படும்போது பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது. 

உணவில் சோடியம் நைட்ரேட் கலக்கப்பட்டது தொடர்பாக போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அந்த உணவைத் தயாரித்துக் கொடுத்த வாங் என்ற ஆசிரியையிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அவர் அதிர்ச்சியளிக்கும் உண்மையை வெளியிட்டார்.

குழந்தைகளுக்கு பொறுப்பான ஆசிரியை பழி வாங்கும் வகையில் தான் உணவில் அந்த வேதிப் பொருளை அதிக அளவில் கலந்ததாக அந்த ஆசிரியை தெரிவித்ததையடுத்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டதோடு, மழலையர் பள்ளியும் மூடப்பட்டது. மற்ற குழந்தைகள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

தற்போது 15 குழந்தைகள் உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில் ஒரு குழந்தைக மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொடூர மனம் படைத்த இந்த ஆசிரியைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.