நள்ளிரவு! நடுரோடு! முட்டை மந்திரித்து பூஜை! மதுரையை மிரள வைக்கும் கேரள மாந்ரீகர்கள்!

நள்ளிரவு நேரங்களில் நடுரோட்டில் கேரள மாந்திரீகர்கள் பூஜை நடக்கும் சம்பவமானது மதுரை நகரவாசிகளிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் நேரு நகர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப்பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் நடுரோட்டில் கேரள மாந்திரீக பூஜை செய்வதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் இதனால் பெரும் அச்சமடைந்துள்ளனர். 

அப்பகுதி மக்கள் கூறுகையில்,"எங்கள் குடியிருப்புக்கு மத்தியில் ஏவல், பில்லிசூனியம் ஆகியவற்றை நீக்குவதாக கூறி கேரள மாந்திரீகர்கள் பலர் பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்கள் குடியிருப்புவாசிகளிடம் பல்லாயிரக்கணக்கான பணத்தை பெற்றுக்கொண்டு நடுரோட்டில் பயமுறுத்தும் வகையில் பூஜைகள் செய்கின்றனர்.

ஒரு சில நயவஞ்சகர்கள் அண்டை வீட்டாருக்கு கேடு விளைவிக்கும் வகையில் இது போன்ற பூஜைகளை செய்கின்றனர். இதனால் எங்களால் வெளியில் செல்ல இயலவில்லை. குழந்தைகளின் நிம்மதியாக விளையாட விட முடிவதில்லை. இதுபோன்ற தேவையற்ற மாந்திரீக முறைகளை காவல்துறையினர் தலையிட்டு கட்டுப்படுத்திட வேண்டும்" என்று கூறியுள்ளனர். நடுரோட்டில் நடைபெறும் மாந்திரீகத்தால் நேரு நகர் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்க்கையை தள்ளுகின்றனர்.