காஷ்மீர் இரண்டானது! மராட்டியமும் இரண்டாகப்போகிறது! அலரும் ராஜ்தாக்ரே! பின்னணி இது தான்!

வருகிற செப்டம்பர் இறுதி, அல்லது அக்டோபர் இறுதியில் மகாராட்டிர மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் ராஜ்தாக்கரே இப்படி பேசி இருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


மகாராட்டிர நவ நிர்மான் சேனா தலைவரான ராஜ் தாக்கரே காஷ்மீரை தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என்று அச்சம் தெரிவித்து இருக்கிறார்.

அந்த மாநிலத்தின் 21 மாவட்டங்களைப் பிரித்து ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹெட் குவார்ட்டசான நாக்பூரைத் தலை நகராக கொண்ட  ' விதர்பா' என்கிற தனி மாநிலக் கோரிக்கை 1960ல் இருந்தே நிலுவையில் இருக்கிறது.

அதில்,மகாராட்டிர மாநிலத்தின் 31% மக்கள் தொகை அடங்கும்.இந்தக் கோரிக்கையும் 1960லிருந்தே நிலுவையில் இருக்கிறது.நாக்பூர் பிஜேபியின் தலைமையகம் என்பதால் அதற்கு தலைநகர் அந்தஸ்த்து வழங்க பிஜேபி விரும்பலாம் என்பது ராஜ் தாக்கரேவின் அச்சம்.இதைச் சுட்டிக்காட்டி மும்பை பிரபாதேவி என்கிற இடத்தில் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறார்.

'தற்போது காஷ்மீரை இரண்டாகப்.பிரித்தது போல மகாராஷ்ட்ராவையும் மும்பை ,விதர்ப்பா என்று இரண்டாகப் பார்ப்பார்கள். அவ்வாறு மகாராட்டிர மாநிலம் பிரிக்கப்பட்டால் உங்கள் வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ராணுவம் நிற்கும்.இனையதளம் மொபைல் சேவைகளை துண்டித்து விடுவார்கள். இரண்டாக மட்டுமல்ல மகாராஷ்ட்ராவை துண்டு துண்டாகக் கூட அவர்கள் பிரித்துவிடக் கூடும்.அவர்களது அடுத்த இலக்கு மகாராஷ்ட்ராவாக இருக்கக் கூடும்.

நீங்கள் பிஜேபியின் புகழ் பாடுபராக இருக்கலாம்,எந்த ஜாதியைச் சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம் உங்களை அவர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். காஷ்மீரில் இப்போது நடப்பது மக்களின் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை.

370 வது சட்டப்பிரிவை நீக்கினால் காஷ்மீரில் வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்களே, 370 சட்டப்பிரிவு இல்லாத மாநிலங்களில் ஏன் வேலை வாய்ப்புகள் உருவாகவில்லை, அதன் காரணம் என்ன என்று கேட்டிருக்கிறார் ராஜ்தாக்கரே.குஜராத்தில்கூட ' செளராஷ்ட்ரா' என்கிற தனிமாநில கோரிக்கை இருக்கிறது என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தெரியும்தானே!.