தெறிக்கவிடும் முத்தம்! நடுங்க வைக்கும் நிசப்தம்! அசத்த வரும் புதிய படம்!

திருடன் போலீஸ் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு அவர்களின் அடுத்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளிவர காத்திருக்கிறது.


இந்த திரைப்படம் தமிழில் "கண்ணாடி" என்றும் தெலுங்கில்  "நின்னு வீதானி " என்றும் வெளிவரபோகிறது. இந்த திரைப்படத்தின் டீசெர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது சைக்கோ த்ரில்லர் சினிமாக்கள் திரை படத் துறையில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.  அந்த வரிசையில் கண்ணாடி திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் பாணியில் சினிமாவை கலக்க வரப்போகிறது என்றே கூறலாம்.

சந்தீப் கிஷான், அன்யா சிங்க் , பூர்ணிமா பாகியராஜ், ஆனந்தராஜ் முரளி சர்மா மற்றும் கருணாகரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை "v ஸ்டுடியோஸ்" தயாரிப்பில் உருவாகிறது. தமிழில்  v ஸ்டுடியோஸ், ஸ்ரீ சரவணா பாவ பிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது. மற்றும் தெலுங்கில் விஸ்டா ட்ரீம்  மெர்ச்சண்ட்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குனர் சந்தீப் கிஷனின் முதல் தெலுங்கு திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் இசையை ss  தமன் அமைக்கிறார். pk  வர்மா இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். Kl .பிரவீன் இந்த படத்தின் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். கார்த்திக் ராஜுவின் இந்த "கண்ணாடி" அவரது முந்தய திரைப்படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.