லாஸ்லியாவிடம் கண்களால் பேசிய கமல்! பிக்பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்த செம சம்பவம்! வைரல் வீடியோ!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மாண்டமாக முடிவடைந்தது.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளராக மலேசியாவைச் சேர்ந்த முகேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 போட்டியாளர்களுக்கும் வியக்க வைக்கும் வகையில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்தவகையில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவிற்கு "லாஸ்லியா ஆர்மி" என்று சமூக வலைத்தளத்தில் பல பக்கங்களும் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 இன் பைனல் விழாவில் , உலகநாயகன் கமலஹாசன் இலங்கையை சேர்ந்த எல்லாரும் கண்களால் பேசிக் கொண்ட வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

https://twitter.com/SataSathiesh/status/1181567925188210689

பிக் பாஸ் சீசன் 3 ஃபைனல் நிகழ்ச்சியின்போது, பிக்பாஸ் வீட்டில் உலகநாயகன் கமலஹாசன் போட்டியாளர்கள் இடம் பேசுவதற்காக சென்று இருந்தார். அப்போது அவருடன் வெளியே செல்வதற்கு சாண்டி துடித்துக் கொண்டிருந்தார். அதனை அறிந்த பிக்பாஸ் அவரை கட்டுப்படுத்தி அமர வைத்தார் .

அந்த நேரத்தில் கமல்ஹாசன் லாஸ்லியாவை பார்த்து கண்ஜாடை காட்டினார். உடனே அதற்கு பதிலாக லாஸ்லியா, கமலஹாசனை பார்த்து கண்ஜாடை காட்டினார். தற்போது இந்த வீடியோ ஆனது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் லாஸ்லியாவின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே இல்லை ..என்று கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.