தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக இன்று உதயமாகிறது கள்ளக்குறிச்சி!நிர்வாக பணிகளை தொடங்கிவைக்கிறார் இபிஎஸ்!

தமிழகத்தின் புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாகிறது.


தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு மாவட்டங்களை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு திருப்பத்தூர் தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை புதிதாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயமாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் துவக்க விழா கள்ளக்குறிச்சியில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் துவக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சண்முகம், உதயகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.