பகுத்தறிவை பறக்கவிட்ட தி.மு.க. தொலைக்காட்சி. நிறம் மாறும் தில்லுமுல்லுத்தனம்.

கொள்கைதான் எங்களுக்கு முக்கியம் என்று வாய் கிழியப் பேசும் தி.மு.க.வின் நிறம் மாறும் சுயநலம் இந்த தீபாவளி திருநாளில் மீண்டும் ஒரு முறை அம்பலப்பட்டுள்ளது.


பொதுவாக, தீபாவளி, கார்த்திகை, ஆயுதபூஜை, விநாயகர் சதுர்த்தி என எந்தவொரு இந்துக்கள் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்வது தி.மு.க.வின் வழக்கம் இல்லை. ஆனால், கிறிஸ்தவர்கள் பண்டிகையை, இஸ்லாமியர் பண்டிகையை மட்டும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அதாவது, கிறிஸ்துமஸ் வாழ்த்து, ரம்ஜான் வாழ்த்து தெரிவிப்பவர்கள், தீபாவளி வாழ்த்து, ஆயுதபூஜை வாழ்த்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது தி.மு.க. இந்துக்களின் எதிரி என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தலுக்காக தங்கள் நிறத்தை மாற்றியுள்ளார்கள்.

ஆம், கலைஞர் தொகைக்காட்சியில் இதுவரை இல்லாத புதுமையாக, தீப ஒளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் எனக் குறிப்பிட்டுள்ளனர். வெற்றிக்காக எந்த தில்லுமுல்லுக்கும் தி.மு.க. ரெடி என்பதைத்தான் இது காட்டுகிறது.